திருப்பதி கோவிலில் 3 தங்க கிரீடங்கள் மாயம்! பாஜகவினர் தர்ணா போராட்டம்

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2019 (07:20 IST)
திருப்பதி கோவிலில் மூன்று தங்க கிரீடங்கள் மாயமான விவகராத்தில் திருடர்களை உடனே கைது செய்யுமாறு பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு நிகரானது. ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இந்த கோவிலுக்கும் வருவதுண்டு

இந்த நிலையில் கோவிந்தராஜ சுவாமி கோவிலின் உற்சவமூர்த்திக்கு பயன்படுத்தும் 1300 கிராம் எடை கொண்ட மூன்று தங்க கிரீடங்கள் நேற்று முன் தினம் திடீரென மாயமாகின. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காமிரா உதவியுடன் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கோவிலின் உள்ளே உள்ள சிசிடிவி கேமராவினை ஆய்வு செய்தபோது, ஒரு நபர் தனது பேண்ட் பாக்கெட்டில் ஏதோ ஒன்றை மறைத்து வைத்து எடுத்துக்கொண்டு ஓடுவது போல் ஒரு காட்சி இருப்பதாகவும், அந்த நபர் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் கிரீடங்களை திருடிய திருடனை உடனே கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஆர்ப்பாட்டம் செய்த பாஜகவினர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்