தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருவதாகவும் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் சுமார் 20 மணி நேரம் காத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இரண்டாவது சனி ஞாயிறு மற்றும் சுதந்திர தினம் என்று தொடர் விடுமுறை காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
திருப்பதியில் உள்ள அறைகள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி இருப்பதாகவும் இலவச தரிசனத்திற்கு சுமார் 3 கிலோமீட்டர் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது
இலவச தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வதாகவும் 300 ரூபாய் தரிசன கட்டணத்திற்கு 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருவதாகவும் அது மட்டுமின்றி அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இருப்பதால் லட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும்
மேலும் திருப்பதியில் கூட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.