வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் எத்தனை பேர்??அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (18:18 IST)
வெளிநாடுகளில் சுமார் 1.25 கோடி இந்தியர்கள் வசிப்பதாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியர்கள் தங்கள் படிப்பு , வேலை, தொழில், குடும்ப வாழ்க்கை,ஆராய்ச்சியின் நிமித்தம் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர்.

இப்படி எத்தனை கோடி இந்தியர்கள் அயல்நாடுகளி வசிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில் இன்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கு பதில் அளித்துள்ளது.

அதில்,  வெளிநாடுகளில் சுமார் 1.25 கோடி இந்தியர்கள் வசித்து வருகிறார்கள் எனவும், வெளிநாடுகளில் வசிப்பவர்களில் 1.41 லட்சம் பேர் இந்திய குடியுரிமையைக் கைவிட்டுள்ளதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்