பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுவன் பலி!

Sinoj
வியாழன், 25 ஜனவரி 2024 (20:00 IST)
அதிசயம் நடக்கும் என நம்பி புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை  கங்கை நீரில் மூழ்க வைத்த பெற்றோரால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த தம்பதியருக்கு 5 வயதில் மகன் இருந்த நிலையில், இந்த சிறுவனுக்கு இரத்த புற்று நோய் இருந்துள்ளது.

எனவே பெற்றோர் மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், இந்த சிகிச்சை மூலம் சிறுவனுக்கு பலனளிக்கவில்லை.

மருத்துவர்கள், இனி சிறுவனை காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டனர். இதனால் மனமுடைந்த தம்பதியர், கோயிலுக்கு சென்று வேண்டுதல் செய்து வந்தனர். இந்த நிலையில், கங்கை நதியில் சிறுவனை மூழ்கி எடுத்தால் அதிசயம் நடக்கும் என்றும் நோய் குணமாகும் என  சிலர் கூறியதை கேட்டு, உத்தரகாண்டின் ஹரித்வாரில் உள்ள ஹர்-கி -பவுரியிக்கு( கங்கை நதி) சிறுவனை அழைத்துச் சென்று சிறுவனை  5 நிமிடங்களுக்கு நீரில் மூழ்க வைத்துள்ளனர்.

இதில் சிறுவன் உயிரிழந்தான். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்