வாட்ஸ் ஆப்பில் பரவும் கொரோனா வதந்தி; முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர்

Arun Prasath
சனி, 29 பிப்ரவரி 2020 (13:54 IST)
சிக்கன் சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவுவதாக பல வதந்திகள் பரவி வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தெலுங்கானா அமைச்சர்கள் மேடையில் சிக்கன் சாப்பிட்டனர்.

கொரோனா வைரஸ் குறித்த அச்சம் மக்களிடம் நிலவி வரும் நிலையில், அது குறித்த வதந்திகளும் பரவி வருகின்றன. அசைவ உணவு சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவுவதாகவும் , குறிப்பாக சிக்கன் மூலம் அதிகமாக பரவுவதாகவும் வதந்திகள் பரவி வருகின்றது. இதனால் மக்கள் அசைவ உணவுகளை தவிர்த்து வரும் சூழலை பார்க்கமுடிகிறது.

இந்நிலையில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், ஹைதராபாத்தில் பொது மேடையில் தெலுங்கானா அமைச்சர்களான கேடி ராமாராவ், எட்டெலா ராஜேந்தர், தலசனி ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் சிக்கன் சாப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்