கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சிஏஏ ஆதாரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே மோதல் நிலவியதில் வன்முறை வெடித்தது. இதில் வீடுகள், வாகனங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது.
3 நாட்களாக தொடர்ந்த இந்த கலவரத்தில் 215 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 35க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கலவரம் ஏற்பட்ட பகுதி மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். எனினும் மக்களிடம் எப்போது வேண்டுமானாலும் கலவரம் வெடிக்கலாம் என்ற அச்சம் உள்ளதாக தெரிய வருகிறது. கடைகள் எதுவும் திறக்கப்படாததால் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.