நிபா வைரஸ் தாக்கியதற்கான அறிகுறிகள் என்னென்ன??

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (16:01 IST)
கேரளாவில் கொரோனா தொற்று பரவல் குறையாத நிலையில் நிபா வைரஸ் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.  
 
நிபா வைரஸ் பாதிப்பால் 12 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் அவனுடன் தொடரில் இருந்து மூவருக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே நிபா வைரஸ் அறிகுறிகள் வெளியாகியுள்ளன. அவை, 
 
1. நிபா வைரஸ் முதலில் லேசான தலைவலியுடன் ஆரம்பமாகும்.
 
2.  தலைவலி தொடர்ந்து நீடிக்கும்.
 
3. தொடர்ந்து வாந்தி வருவது போல இருக்கும்.
 
4. வாந்தியுடன் லேசான மயக்கமும் ஏற்படும்.
 
5. மயக்கத்தில் இருந்து மீள முடியாத நிலை ஏற்படும்.
 
6. நாள் முழுக்க உடல் சோர்வுடன் மயக்கமாகவே காணப்படும்.
 
7.தலைவலி தீவிரமாகி காய்ச்சலும் அதிகரிக்கும். 10 நாட்களுக்கு பிறகு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
 
8. நோயின் தீவிரம் குறையாமல் தொடர்ந்தால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்