போராட்டம் நடத்துவதால் தீர்வு கிடைக்காது: விவசாயிகள் போராட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்!

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (14:01 IST)
போராட்டம் நடத்துவதால் மட்டுமே போராட்டத்திற்கான தீர்வு கிடைக்காது என்றும் வெறுமனே அமர்ந்து போராடுவதால் எந்த தீர்வும் கிடைக்காது என்றும் சுப்ரீம் கோர்ட்டு விவசாயிகள் போராட்டம் குறித்து கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
டெல்லியில் வேளாண் மசோதாவிற்கு எதிராக போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிய மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்தது. இந்த விசாரணையின்போது விவசாயிகளுக்கு போராட அனைத்து உரிமையும் உள்ளது என்றும் அதில் தலையிட மாட்டோம் என்று கூறிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஆனால் அதே நேரத்தில் போராடும் விதம் மற்றும் இடம் தொடர்பாக கவனத்தில் கொண்டுள்ளோம் என்று தெரிவித்தனர் 
 
இந்த போராட்டத்திற்கு மாற்று என்ன என்பது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்க வேண்டியுள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் புதிய வேளாண்மை சட்டங்களுக்கு எதிரான வழக்கில் தற்போது விசாரணை இல்லை என்றும் விவசாயிகள் போராட்டம் பற்றி மட்டுமே இன்று விசாரிக்க முடியும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது 
 
விவசாயிகள் போராட்டம் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் டெல்லிக்கு வருவது தடைபடுவதாக இந்த வழக்கின் விசாரணையின்போது அரசு வழக்கறிஞர் வாதாடினார். அப்போது போராட்டத்திற்கான தீர்வு வெறுமனே அமர்ந்து போராடுவதால் கிடைத்துவிடாது என்றும் எனவே மத்திய அரசும் விவசாயிகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்