நாடு முழுவதும் பட்டாசு உற்பத்திக்கு தடை கோரி வழக்கு: சிவகாசியை ஒழிக்க திட்டமா?

Webdunia
சனி, 6 ஜனவரி 2018 (05:52 IST)
பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகக் கூறி, நாடு முழுவதிலும் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு காரணமாக அதிக அளவில் கொள்முதல் செய்யும் வட மாநில வியாபாரிகள் பட்டாசுகளை தற்போது கொள்முதல் செய்ய தயங்குகின்றனர். இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்தே கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

இந்த பிரச்சினையால் சிவகாசியில் பட்டாசு தொழிலே முடங்கும் அபாயம், ஏற்பட்டுள்ளது. பட்டாசு உற்பத்திக்கு தடை கோரிய வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கவும், பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்க அனுமதித்து சிறப்பு சட்டத்திருத்தம் கொண்டுவர வலியுறுத்தியும் கடந்த டிச.26 முதல் சிவகாசியில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. இந்த வேலைநிறுத்தத்திற்கு அனைத்துக் கட்சிகள் மற்றும் அனைத்து வணிகர் சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளது

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீது மத்திய அரசு மற்றும் அனைத்து மனுதாரர்களும் 2 வாரங்களுக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்