திருமணமாகி ஒரு வருடத்திற்குள் பெண் புகார் அளித்தால் வன்கொடுமையே: சுப்ரீம் கோர்ட்

Webdunia
புதன், 11 அக்டோபர் 2017 (11:38 IST)
பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை வரையறை குறித்து சுப்ரீம் கோர்ட் இன்று தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு பெண் திருமணமாகி ஒரு வருடத்திற்குள் கணவர் அல்லது கணவரின் குடும்பத்தினர் மீது புகார் அளித்தால் அது வன்கொடுமையாக கருதப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் அதிரடியாக அறிவித்துள்ளது.



 
 
மேலும் 18 வயதிற்குட்பட்ட சிறுமியை திருமணம் செய்து அவருடைய சம்மதத்தின் பேரிலேயே உறவு கொண்டாலும் அதுவும் பாலியல் வன்கொடுமையே என்று சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. 
 
இந்த புதிய அதிரடி உத்தரவால் குழந்தை திருமணங்கள் கட்டுப்படுத்தப்படும் என்றும், திருமணமான பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்