பிரபாகரனின் சதியிலிருந்து இந்தியாவை காப்பற்றியது ராஜபக்‌சே தான்.. சுப்ரமணியன் சுவாமி சர்ச்சை கருத்து

Webdunia
திங்கள், 29 ஜூலை 2019 (12:33 IST)
பாஜக-வின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சவாமி, விடுதலை புலிகளின் சதியிலிருந்து இந்தியாவை காப்பாற்றியது இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்‌சே தான் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பாஜக-வின் மூத்த தலைவர் சுப்ரமணியம் சுவாமி, இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்‌சேவின் தீவிர ஆதரவாளர். பல வருடங்களாகவே ராஜபக்‌ஷேவை தனது நண்பர் என்றும், அவர் ஒரு சிறந்த ஆட்சியாளர் என்றும் புகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில், சுப்ரமணியன் சுவாமியை தனது மகனின் திருமணத்திற்கு வருமாறு ராஜபக்‌சே அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை குறித்து மிகவும் மகிழ்ச்சியாக தனது டிவிட்டர் பக்கத்தில் சுப்ரமணிய சுவாமி பகிர்ந்துள்ளார்.

அந்த டிவிட்டர் பக்கத்தில், ”எனது நண்பர் ராஜபக்‌சே என்னை தொடர்பு கொண்டு தனது மகனின் திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது” என தெரிவித்துள்ளார். மேலும் அதில் விடுதலை புலிகளின் சதியையும் பாகிஸ்தானின் சதியையும் முறியடித்து, இந்தியாவை காப்பாற்றியது இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்‌சே தான் எனவும் சுப்ரமணியன் சுவாமி மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

தமிழீழப் படுகொலைகளை தொடர்ந்து ராஜபக்‌சேவை போர் குற்றவாளி என தமிழ் அமைப்புகளும், பல அரசியல் தலைவர்களும் குற்றம் சாட்டிவரும் நிலையில், தற்போது சுப்ரமணியன் சுவாமியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்