இனிமேல் கட்-அவுட் வைக்க, போஸ்டர் ஒட்ட தடை - மாநகராட்சி கண்டிப்பு

Webdunia
வியாழன், 23 ஜூன் 2016 (11:13 IST)
கட் அவுட் வைப்பதற்கும், போஸ்டர் ஒட்டுவதற்கும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
 

 
பெங்களூரு மாநகரில், பிஜி ஹாஸ்டல் விளம்பரமோ அல்லது சினிமா தியேட்டர் விளம்பரமோ எதுவாக இருந்தாலும் சுவற்றிலோ, மரத்திலோ ஒட்டியிருப்பதை பார்த்தால் பெங்களூர் மாநகராட்சியின் பறக்கும்படை சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த உத்தரவை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்வதற்கான அதிகாரம், பெங்களூர் மாநகராட்சியின் அதிரடிப் படைக்கு வழங்கப்பட்டு உள்ளது.
 
இந்த அதிரடிப்படை முன்பு, அனுமதி பெறாத விளம்பரங்கள் குறித்த கணக்கெடுப்பை மட்டுமே நடத்தி வந்தன. தற்போது, அந்த படைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்