9 வயது சிறுவனை கடித்துக் கொன்ற தெரு நாய்கள்

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (13:38 IST)
ஆந்திராவில் 9 வயது சிறுவனை தெரு நாய்க்கள் கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தெரு நாய்க்கள் தாக்கி மனிதர்கள் உயிரிழந்து வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
 
இந்நிலையில் ஆந்திர மாநிலம் அம்மப்பள்ளி கிராமத்தில் ஜஸ்வானந்த் என்ற 9 வயது சிறுவன் சாலையில் நடந்து சென்றுள்ளான். அங்கு சுற்றித் திரிந்த தெரு நாய்க்கள் சிறுவனை பார்த்து குறைத்துள்ளன. இதனால் பயந்துபோன சிறுவன் அந்த இடத்தை விட்டு ஓட முயற்சித்துள்ளான்.
 
இதனையடுத்து அந்த சிறுவனை வளைத்த தெரு நாய்கள், சரமாரியாக கடித்து குதறியுள்ளன. அங்கிருந்தவர்கள் நாயிடமிருந்து சிறுவனை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் சிறுவனின் குடும்பத்தார் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்