இந்தியில் பெயர் மாற்றாததால் நிதி நிறுத்தம்? அமைச்சர் குற்றச்சாட்டு

Sinoj
வியாழன், 11 ஜனவரி 2024 (14:28 IST)
ஆயுஸ்மான் ஆயோக்யா மந்தி என்று பெயர் மாற்றாததால்  மத்திய அரசு நிதியுதவி வழங்கவில்லை என கேரளம் மாநில சுகாதாரதுறை அமைச்சர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

கேரளம் மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, ஆயுஸ்மான் ஆயோக்யா மந்தி என்று பெயர் மாற்றாததால்  மத்திய அரசு நிதியுதவி வழங்கவில்லை என கேரளம் மாநில சுகாதாரதுறை அமைச்சர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

தேசிய சுகாதார இயக்கம்( National Health Misson) திட்டத்தின் மருத்துவ மையங்களை ஆயுஸ்மான் ஆரோக்ய மந்திர் எனப் பெயர் மாற்ற மறுத்ததால் மத்திய அரசு மா நிலத்திற்கு நிதியுதவி வழங்கவில்லை என கேரளம் சுகாதாரத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

மத்திய அரசு 60 சதவீதம்- மாநில அரசு 40சதவீதம் அரசு நிதியில் செயல்படுத்தப்படும்  தேசிய சுகாதார இயக்கம் எனும் பிராதன் மந்திரி சமக்ரா ஸ்வாஸ்த்ய மிஷன் என பெயர் மாற்றம் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்