விமானத்தில் ஸ்டாண்டிங் பயணம்.. இண்டிகோ விமானத்தில் ஒரு பயணியால் பரபரப்பு!

Mahendran
புதன், 22 மே 2024 (15:03 IST)
மும்பையில் இருந்து வாரணாசிக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் நின்றபடி பயணி ஒருவர் பயணம் செய்து வந்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மும்பை விமான நிலையத்தில் நேற்று காலை 7:50 மணிக்கு இண்டிகா விமானம் வாரணாசிக்கு புறப்பட்ட நிலையில் விமானத்தில் உள்ள அனைத்து இருக்கைகளும் நிரம்பிவிட்டது. ஒரு பயணிக்கு மட்டும் இருக்கை இல்லாமல் கடைசி வரிசையில் நின்று கொண்டிருந்தார் 
 
விமான பணியாளர்கள் அவரிடம் ஏன் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று விசாரிக்கவில்லை என்றும் அவரை கவனிக்காமலேயே விமானம் இருந்து புறப்பட்டு விட்டது என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில்தான் திடீரென விமான பணியாளர் ஒருவர் அந்த பயணி நின்று கொண்டிருந்த அந்த பயணியை கவனித்த நிலையில் அவர் இருக்கை இல்லாமல் நின்று கொண்டு வருவதை கவனித்து மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு விமானம் திரும்பிச் சென்றது 
 
அந்த விமானியை இறக்கி விட்டு விட்டு மீண்டும் ஒரு மணி நேரம் தாமதமாக வாரணாசிக்கு அந்த விமானம் கிளம்பியது. இது குறித்து இண்டிகோ வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் பயணிகளுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்வதில் தவறு ஏற்பட்டுவிட்டது என்றும் காத்திருப்பு பட்டியில் இருந்த பயணிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதால் இந்த குழப்பம் ஏற்பட்டதாகவும் விமானம் தாமதம் ஆனதற்கு வாடிக்கையாளர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்