குழந்தைகளுக்கு கொரோனா வரலாம்.. ஆனா பயப்பட வேண்டாம்! – விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்!

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (10:24 IST)
இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மூன்றாம் அலை குறித்து பேசியுள்ள உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் “இந்தியாவில் ஜூலை மாதத்தில் 65 சதவீதம் மக்களுக்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. இதுதவிர நாடு முழுவதும் 60 சதவீதம் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது அலையை கட்டுப்படுத்த மக்கள் தொடர்ந்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். மூன்றாம் அலையால் குழந்தைகள் பாதிக்கப்படுவது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும். மேலும் குழந்தைகளுக்கு இதனால் ஏற்படும் பாதிப்பும் குறைவான அளவிலேயே இருக்கும் என்பதால் சிகிச்சையில் விரைவில் மீண்டு வரும் வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்