இன்று தடுப்பூசி மையங்கள் செயல்படாது! ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

திங்கள், 27 செப்டம்பர் 2021 (08:17 IST)
தமிழகம் முழுவதும் நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்ற நிலையில் இன்று தடுப்பூசி மையங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 3 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறாக நேற்றும் தடுப்பூசி முகாம் இரவு 8 மணி வரை தொடர்ந்தது.

இந்நிலையில் இன்று தடுப்பூசி மையங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மெகா தடுப்பூசி முகாமிற்காக ஏராளமான சுகாதார பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஓய்வு வழங்குவதற்காக இன்று விடுப்பு வழங்கப்பட்டுள்ளதால் தடுப்பூசி மையங்கள் செயல்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்