ஒடிஸா வளங்களை தமிழகத்தை சேர்ந்தவர்கள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று அவர் ஒடிசா பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியபோது ஒடிசாவில் ஆட்சியில் உள்ள பிஜு ஜனதா தள அரசு நிலக்கரி, மணல், சுரங்க கொள்ளை கும்பல்களை வளர்த்து விட்டுள்ளது என்றும் ஒடிசாவில் வளங்களை கொள்ளை அடிக்க எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், அவர்களுடைய ஆதரவாளர்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் வேலை செய்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை நம்பர் ஒன் நாடாக வளர்க்க பணியாற்றி வருகிறது என்றும் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒடிசாவை சேர்ந்தவர்தான் முதல்வராக நியமனம் செய்யப்படுவார் என்றும் அவர் கூறினார்.
ஒடிஸாவில் ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.