பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

Mahendran
வெள்ளி, 22 நவம்பர் 2024 (16:54 IST)
கேரளாவில் பெண் போலீசை அவரது கணவரே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த காசர்கோடு என்ற பகுதியில் ராஜேஷ் மற்றும் திவ்யஸ்ரீ தம்பதிகள் இடையே சில மாதங்களாக கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாக தெரிகிறது. திவ்யஸ்ரீ காவல்துறையில் பணிபுரிந்து வரும் நிலையில்  தனது 8 வயது மகனுடன் அவர் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று திடீரென மனைவியை பார்க்க ராஜேஷ் வந்துள்ளார். இருவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை முற்றிய நிலையில், திடீரென ராஜேஷ் திவ்யாவை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். அவரை தடுக்க வந்த திவ்யஸ்ரீ தந்தைக்கும் கத்தி குத்து விழுந்து உள்ளது.

இதனை அடுத்து, ரத்த வெள்ளத்தில் மிதந்த திவ்யஸ்ரீயை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிகிறது. படுகாயம் அடைந்த திவ்யஸ்ரீ தந்தை சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தப்பி ஓடிய ராஜேஷை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் போலீசை அவரது கணவரே வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்