டீச்சர் கொலை.. வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு.. முதல்வர் ஸ்டாலின் வெட்கப்படனும்: அண்ணாமலை

Siva

புதன், 20 நவம்பர் 2024 (18:46 IST)
காலையில் ஆசிரியை கொலை மற்றும் மாலையில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு ஆகிய சம்பவங்கள் காரணமாக முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் என்று அண்ணாமலை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு இருப்பதாக கூறியுள்ளார். தஞ்சையில் பள்ளி ஆசிரியை வகுப்பறையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் ஓசூரில் வக்கீல் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார் என்றும் இந்த சம்பவங்கள் திமுக அரசு நிர்வாகத்தின் மிக மோசமான சட்டம் ஒழுங்கை எதிரொலிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இதற்காக வெட்கப்பட வேண்டும் என்றும் இது போன்ற விவகாரங்களை திசை திருப்புவதற்கு பதிலாக சிறிய நடவடிக்கை எடுத்திருந்தால் இது மாதிரியான சம்பவங்களை தடுத்திருக்கலாம் என்றும் சட்டம் ஒழுங்கு மீறல்களை இனி மேலும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே திமுக அரசின் காவல்துறைக்கு தெரியாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை என்று இன்று காலை நீதிமன்றம் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்