முதல்வர் பதவி எங்களுக்கே... அடித்து பேசும் சிவசேனா மூத்த தலை!

Webdunia
செவ்வாய், 5 நவம்பர் 2019 (12:57 IST)
மகாராஷ்டிரா மாநில முதல்வர் பதவி சிவசேனாவுக்கே கிடைக்கும் என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து முடிவு அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகியும் இன்னும் அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என கருதப்பட்ட நிலையில் தற்போது யாருக்கு முதல்வர் பதவி? என்பதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. 
 
இந்த நிலையில் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க சிவசேனாவுக்கு ஆதரவளிக்க தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் சிவசேனா தலைமையில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமையும் என்றும் கூறப்படுகிறது.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா 56 தொகுதிகளிலும் தேசியவாத காங். 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றறுள்ளதால் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங். இணைந்தால் 150 உறுப்பினர்கள் உள்ளது. ஆட்சி அமைக்க 145 உறுப்பினர்கள் போதும் என்பதால் இந்த கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என்றே தெரிகிறது.
 
இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மகாராஷ்ட்ரா மாநில முதல்வர் பதவியை பெறுவதில் சிவசேனா கட்சி தான் வெற்றி பெறும் என உறுதியாக தெரிவித்துள்ளார். அதோடு, மகாராஷ்ட்ராவில் நிலவுவது குழப்பம் அல்ல, நீதி, உரிமைக்காக நடக்கும் போராட்டம். மகாராஷ்ராவில் அரசியல் மாறிக்கொண்டு இருப்பதாகவும் அதன நீங்க காண்பிர்கள் எனவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்