பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மீண்டும் உயர்வு!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (11:14 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரே நாளில் 1700 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால் சுமார் பத்தாயிரம் கோடி அளவுக்கு முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர் என்று கூறப்பட்டது
 
ஆனால் அதற்கு அடுத்த நாள் அதே 1700 புள்ளிகள் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை தந்தது. இந்த நிலையில் இன்று சென்செக்ஸ் சுமார் 100 புள்ளிகள் வரை உயர்ந்தது 58,000 வரை சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் நிப்டி 42 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 300க்கும் மேல் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பங்குச் சந்தை இன்னும் சில நாட்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நீண்ட கால முதலீட்டாளர்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்