சென்செக்ஸ் 1,736 புள்ளிகள் உயர்ந்து 58,142 புள்ளிகளில் நிறைவு!!

செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (16:03 IST)
சென்செக்ஸ் 1736 புள்ளிகள் உயர்ந்து 58,142 புள்ளிகளில் வணிகமாகி ஏற்றத்தில் நிறைவு பெற்ற பங்குச்சந்தை. 

 
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை இறங்குமுகத்தில் இருந்தது என்பதும் குறிப்பாக நேற்றைய பங்குச்சந்தை ஆயிரத்து 700 புள்ளிகள் வரை சரிந்து அதலபாதாளத்துக்குச் சென்றது என்பதும் தெரிந்ததே. 
 
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இன்று பங்கு சந்தை சுமார் 900 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்கள் சற்று நம்பிக்கை அளித்துள்ளது. இன்று காலை முதலே ஏற்றத்தில் இருந்த பங்கு சந்தை சட்டத்தின் கீழ் சுமார் 900 புள்ளிகள் உயர்ந்து 57,190 என்ற நிலையில் வர்த்தகமானது.  
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 260 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 11,107 என்ற முறையில் விற்பனை வர்த்தகமானது. இதனிடையே மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,736 புள்ளிகள் உயர்ந்து 58,142 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 509 புள்ளிகள் அதிகரித்து 17,352 புள்ளிகளில் வர்த்தகமாகி நிறைவு பெற்றது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்