லஞ்சம் வாங்கியதாக கைதான அதிகாரத்துவவாதி மகனுடன் தற்கொலை

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (16:33 IST)
சிபிஐ விசாரணையில் இருந்து வந்த மத்திய முன்னாள் நிறுவன விவகாரங்கள் இயக்குனர் ஜெனரல் பி.கே.பன்சால் தனது மகனுடன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மத்திய முன்னாள் நிறுவன விவகாரங்கள் இயக்குனர் ஜெனரல் பி.கே.பன்சால் தனியார் நிறுவனத்துக்கு சாதமாக செயல்பட ரூ.9 லட்சம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.
 
இதுப்பற்றி தகவல் அறிந்த சிபிஐ அதிகாரிகள் பன்சால் தங்கியிருந்த ஓட்டலில் பணம் கைமாறியபோது பிடித்தனர். அதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கே.பி.பன்சாலுக்கு சிபிஐ நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது.
 
சிபிஐ விசாரணையில் இருந்த பி.கே.பன்சால் கிழக்கு டெல்லியில் உள்ள தனது வீட்டில் மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவரும், ஆவரது மகனும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் அதே வீட்டில்தான் பன்சால் மனைவி மற்றும் மகள் தற்கொலை செய்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்