ரஷ்யாவில் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வரும் நிலையில், முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக கூறப்பட்டு வருகிறது. மேலும், உக்ரைன் உடனான போர் காரணமாகவோ, பிறப்பு விகிதம் மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ள ரஷ்யா, குழந்தை பெற்றெடுக்கும் 25 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு ரூ.84,000 பரிசுத்தொகை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
ரஷ்யாவில் வரலாறு காணாத அளவு, தற்போது குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. குழந்தை பிறப்பிப்பது குறித்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 25 ஆண்டுகளில் கடந்த ஆண்டுதான் மிகவும் குறைந்த அளவில் குழந்தைகள் பிறந்துள்ளதாக புள்ளி விவரம் ஒன்று கூறியுள்ளது. இதனை அடுத்து, ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கும் 25 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு, இந்திய மதிப்பில் 84 ஆயிரம் வழங்கப்படும் என்று ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.