பாஜக இம்முறையும் தனிப்பெரும் கட்சியாக வரும்: காங்கிரஸ் எம்பி சசிதரூர் பேட்டி..!

Mahendran
புதன், 17 ஜனவரி 2024 (13:42 IST)
பிரதமர் மோடிக்கு இணையான தலைவராக ராகுல் காந்தி இல்லை என சமீபத்தில் கார்த்திக் சிதம்பரம் பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் இம்முறையும் பாஜக தான் தனிப்பெரும் கட்சியாக வரும் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வரும் என்றும் ஆனால் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில கட்சிகள்  ஆதரவு கொடுக்க மறுப்பதால் பாஜக வெற்றி பெறும் தொகுதிகளில் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார். 
 
கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க பாஜக தயாராக இல்லை என்றும் எனவே பாஜக கூட்டணியில் இருந்து விலகும் கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் எதிர்க்கட்சி கூட்டணி சுமூகமாக தொகுதி உடன்பாடு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.  
 
மக்களவைத் தேர்தலுக்காக தான் பாஜக அவசர அவசரமாக ராமர் கோவில் திறப்பு விழா நடத்துகிறது என்று  அவர் கூறினார். பாஜக இம்முறையும் தனிப்பெரும் தனிப்பெரும் கட்சியாக வரும் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்