பாட்னா மாநாடுக்கு பதிலடியா பவார் கட்சி உடைப்பு? பெங்களூரு கூட்டத்திற்கு பின் எந்த கட்சி உடையும்?

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (16:36 IST)
சமீபத்தில் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்த நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய தலைவர்களில் ஒருவரான சரத்பரின் கட்சி நேற்று உடைந்தது. அந்த கட்சியில் இருந்து அஜித் பவார் தனது ஆதரவாளர்களுடன் ஆளும் பாஜக சிவசேனா கூட்டணிக்கு ஆதரவளித்து துணை முதலமைச்சர் பதவியும் பெற்றுக் கொண்டார். 
 
பாட்னா கூட்டத்தில் சரத் பவாருக்கு முக்கியத்துவம் கொடுத்த நிலையில் அவருடைய கட்சி உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக பெங்களூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் அதில் கலந்து கொள்ளும் கட்சிகளில் ஒன்று உடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கட்சி எதுவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
பாஜகவுக்கு எதிராக எந்த கட்சி தீவிரமாக செயல்பட்டாலும் அந்த கட்சி உடைக்கப்பட்டு சிதறி வருகிறது என்பதை கடந்த சில ஆண்டுகளில் பார்த்து வருகிறோம்.  அது மேலும் தொடர்ந்து வரும் நிலையில் பாஜகவுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை அமையுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்