வீட்டில் கழிப்பறை இல்லாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் - அரசின் அதிரடி ஆணை

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (07:30 IST)
ஜம்மு காஷ்மீரில் வீட்டில் கழிப்பறை இல்லாத 616 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைத்து ஜம்மு காஷ்மீர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஸ்வச் பாரத்திட்டத்தின்(Swachh Bharat Mission) கீழ் வீடுகளில் கழிப்பறை கட்டப்பட்டு, திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்துவது குறைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஜம்மு-காஷ்மீரில் 71 சதவீதம் வீடுகளில் கழிப்பறை வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
 
இந்நிலையில் அரசு ஊழியர்களின் வீடுகளில் கழிப்பறை இருக்கிறதா? என்பது குறித்து ஜம்மு-காஷ்மீர் துணை ஆணையர் அனில் குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். கிஸ்த்துவார் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் 616 வீடுகளில் கழிப்பறை இல்லாததது ஆய்வில் தெரியவந்தது.
அரசு ஊழியராக இருந்து கொண்டு அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பது வெட்கக்கேடானது எனவும் வீடுகளில் கழிப்பறை கட்டாமல் இருக்கும் 616 அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என மாவட்ட மேம்பாட்டு ஆணையர்  அதிரடி ஆணையை பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்