”ஒவ்வொரு தர்பாரிலும் ரஜினி தான் தலைவர்”.. தமிழில் டிவிட் செய்த சச்சின்

Arun Prasath
வியாழன், 12 டிசம்பர் 2019 (17:15 IST)
ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் இன்று (12.12.2019) தனது 70 ஆவது வயதை நெறுங்குகிறார். இவருக்கு இந்திய அளவில் பெரும் ரசிகர் பட்டாளம் இருப்பதால், இவரது பிறந்தநாள் ஒரு கொண்டாடமாகவே கடைபிடிக்கப்படுகிறது.

இவரது நற்பணி மன்றங்களும் ரசிகர் மன்றங்களும் இவரது பிறந்தநாளை வருடந்தோறும் விமரிசையாக கொண்டாடுவர். தற்போது அரசியலிலும் ஈடுபடப்போவதாக அறிவித்தத்தை அடுத்த திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை சேந்தவர்கள் இவரது கருத்துகளுக்கு விமர்சனமும் செய்துவருகின்றனர்.

ரஜினியின் பிறந்தநாளுக்கு கமல்ஹாசன், ஸ்டாலின் உட்பட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதில், பிறந்த நாள் நல்வாழ்த்துகள் என தமிழில் என தமிழில் டிவிட் செய்துள்ளார். மேலும் ”திரையில் உங்களது ஸ்டைலும், திரைக்கு வெளியே உங்களது எளிமையும் உங்களை ஓவ்வெறு தர்பாரிலும் தலைவனாக திகழவைக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்