சபரிமலை தரிசனம் ஆரம்பம்: பெண்களுக்கு அனுமதியில்லை – அமைச்சர் திட்டவட்டம்!

Webdunia
சனி, 16 நவம்பர் 2019 (08:40 IST)
சபரிமலை தரிசனம் இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பெண்களுக்கு முழுவதுமாக அனுமதி கிடையாது என கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக இன்று நடை திறக்கப்படுகிறது. சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகாத நிலையில், தீர்ப்பு வெளியாகும் வரை பெண்களை அனுமதிப்பது இல்லை என கேரள அரசு முடிவெடுத்துள்ளது.

பெண்ணுரிமை ஆர்வலர் திருப்தி தேசாய் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பித்து உள்ளனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி தரப்படாது என அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்தமுறை போல இந்த முறை சபரிமலையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படாது என மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்