மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒஸ்மனாபாத் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த மாநில பாஜக அமைச்சர் ஒருவரின் காரில் 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுகள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வழக்கமாக வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது.
இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க எடுத்து செல்லுவதாக கூறியுள்ளனர். ஆனால் அதற்கான எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லாததால் அந்த பணம் கைப்பற்றப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பணம் கைப்பற்றப்பட்ட கார் அந்த மாநில கூட்டுறவுத்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சுபாஷ் தேஷ்முக்கின் கார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக அமைச்சரின் காரிலேயே பணம் சிக்கியது அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.