தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 'ஆர்.ஆர்.ஆர்’ பிரபலம்..!

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2023 (11:05 IST)
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படத்தில் பணிபுரிந்த பிரபலம் ஒருவர் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த முதல் பட்டியலை ஏற்கனவே முதல்வர் சந்திரசேகர் ராவ் கட்சி வெளியிட்டது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விண்ணப்பம் வரவேற்பு வரவேற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தில் ஆஸ்கார் விருது வென்ற நாட்டு நாட்டு என்ற பாடலை பாடிய பாடகர் ராகுல் என்பவர் தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விண்ணப்பம் செய்துள்ளதாகவும் இவர் கோஷ மஹால் என்ற தொகுதியில் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்