ரூ.251க்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக அறிவித்த ரிங்கிங் பெல்ஸ் தலைவர் அதிரடி கைது

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (05:05 IST)
உலகிலேயே மிகக்குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வழங்குவதாக அறிவித்து கோடிக்கணக்கில் பொதுமக்களிடம் இருந்து பணம் வசூல் செய்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.




 ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் மோஹித் கோயல் மீது அயாம் என்டெர்பிரைசஸ் நிறுவனம் மோசடி புகார் ஒன்றை சமீபத்தில் கொடுத்திருந்தது. இந்த புகாரில் ரூ.30 லட்சம் வரை தங்களிஅம் ரொக்கத்தை பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக ரூ.16 மதிப்புடைய பொருட்களை மட்டும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் சப்ளை செய்ததாகவும், மீதமுள்ள பொருளையோ அல்லது பணத்தையோ கேட்டபோது கொலை செய்வதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் மோஹித் கோயல் மிரட்டியதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகார் குறித்து விசாரணை செய்த போலீசார் ரிங்கிங் பெல்ஸ் தலைவர் மோஹித் கோயல் கைது செய்தனர். இவர் உலகின் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களை ரூ.251க்கு வழங்குவதாக கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்து கோடிக்கணக்கில் சுமார் 30,000 வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்று இன்னும் அவர்களுக்கு போன்களை வழங்காமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்