ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு எம்பி பதவி!

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (07:37 IST)
சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களை மாநிலங்களவை உறுப்பினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் நியமனம் செய்துள்ளார்.
 
இந்தியாவின் 46-வது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றிய ரஞ்சன் கோகாய் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி பதவியேற்று 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஓய்வு பெறுவதற்கு முன் இவர் அளித்த பரபரப்பான தீர்ப்புகளில் அயோதி ராமர் கோயில் வழக்கு வழக்கும் ஒன்று என்பது குறிப்ப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ரஞ்சன் கோகாயை நியமன எம்பியாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் அறிவித்துள்ளார். காலியாக இருக்கும் ஒரு எம்பி பதவிக்கு அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்