மிகப்பெரிய ரயில் விபத்து.. 15 மணி நேரத்தில் முடிந்த மீட்புப்பணிகள்: வல்லரசு நாடுகள் ஆச்சரியம்..!

Webdunia
ஞாயிறு, 4 ஜூன் 2023 (13:40 IST)
வரலாறு காணாத மிகப்பெரிய ரயில் விபத்து நடந்த போதிலும் அந்த ரயில் விபத்தின் மீட்பு பணிகள் 15 மணி நேரத்தில் முடிவடைந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் வல்லரசு நாடுகளையே ஆச்சரியப்படுத்தி உள்ளது. 
 
ரயில் விபத்து குறித்த செய்தி அறிந்ததும் உடனடியாக அடுத்த ஒரு மணி நேரத்தில் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. ரயில்வே விபத்து நடந்த பகுதியில் 45 மொபைல் மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டன 
 
உடனுக்குடன் காயம் அடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டது. மேலும் கேஸ் கட்டர், மோப்ப நாய் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி உடனடியாக இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர் என்பதும் கவிழ்ந்து கிடந்த ரயில் பெட்டிகளை நிமிர்த்தம் பணிகளும் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
15 மணி நேரத்தில் இந்த ரயில் விபத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டனர் என்பதும் பலியானவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வல்லரசு நாடுகளை திரும்பி பார்க்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீட்பு பணிகளை செய்த ஒரிசா மாநில அரசு மற்றும் இந்திய மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்