பிணத்தை தோண்டி எடுத்து செக்ஸ் உறவு வைத்த கயவர்கள்: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 14 ஏப்ரல் 2017 (06:45 IST)
பெண்கள் உயிருடன் இருக்கும்போதுதான் பாலியல் தொல்லை கொடுக்கும் ஆண்கள் இருக்கின்றார்கள் என்றால் இறந்த பின்னரும் அவர்களை நிம்மதியாக இருக்கவிடுவதில்லை சில கயவர்கள்



 


ஆம், உத்தரபிரதேச மாவட்டத்தில் புதைக்கப்பட்ட 26 வயது பெண் ஒருவரின் பிணத்துடன் இரண்டு இளைஞர்கள் உறவு கொண்ட அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

கடந்த வாரம் 26 வயது பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது. ஆனால் அந்த பெண் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்துவிட்டார்.

மிகுந்த சோகத்துடன் அவரது உறவினர்கள் அந்த பெண்ணுக்கு இறுதி சடங்கு செய்து புதைத்தனர். இந்த நிலையில் இரண்டு நாள் கழித்து அந்த பெண்ணின் பிணம் புதைத்த இடத்தின் அருகே நிர்வாணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பிணத்தை மீண்டும் ஆய்வு செய்தபோது இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்டோர் பிணத்துடன் செக்ஸ் உறவு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து பிணத்துடன் உறவு கொண்ட கயவர்களை தேடி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்