வாடகை வீட்டில் மாணவருக்கு நேர்ந்த கொடுமை: ஷூவை நக்க வைத்த வீட்டு ஓனர்!!

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2017 (11:06 IST)
தண்ணீரை வீணடித்ததாகக் கூறி, வாடைகைக்கு இருந்த இளைஞர் ஒருவரை வீட்டு உரிமையாளர் ஷூவை நக்க வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 
 
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹிகியோ குண்டே என்ற மாணவர் பெங்களூரில் வாடகை வீட்டில் தங்கி படித்து வருகிறார். 
 
இவர் வாடகைக்குத் தங்கியிருக்கும் குடியிருப்பின் உரிமையாளர், இவரை தனது ஷூவை நக்க வைத்ததாக காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
 
ஹிகியோ தண்ணீரை அதிகமாக வீண்டித்தார் என்பதால் வீட்டு உரிமையாளர் அவரைத் தாக்கி தனது ஷூவை நக்க வைத்திருப்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே, வீட்டின் உரிமையாளர் ஹேமந்த் குமார் காவல் துறையிடம் சரணைந்துள்ளார். காவல் துறையினர் இது குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்