வாக்காளர் பட்டியல் வெளியீடு..! புதுச்சேரியில் மொத்தம் 10,20,914 வாக்காளர்கள்..!

Senthil Velan
வெள்ளி, 5 ஜனவரி 2024 (15:24 IST)
புதுச்சேரியில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில்,  மாநிலத்தில் மொத்தம் 10,20,914 வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்
 
புதுச்சேரி மாநிலத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2024ஆம் ஆண்டிற்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தப்பணி கடந்த 27.10.2023 முதல் 09.12.2023 வரை நடைபெற்றது. இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது
ALSO READ: தொழிலதிபர் மீது நாட்டு வெடிகுண்டு வீச முயற்சி..! வெடிகுண்டு தவறி விழுந்து வெடித்ததால் 3 பேர் காயம்..!
 
மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில், புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 10,20,914 வாக்காளர்கள் உள்ளதாகவும், இதில் ஆண்- 4,79,329, பெண் வாக்காளர்கள் 5,41,437, மூன்றாம் பாலினம்-148 வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக வில்லியனூர் தொகுதியில் - 45,753 வாக்காளர்களும், 
குறைந்தபட்சமாக உருளையான்பேட்டை தொகுதியில் 25,019 வாக்காளர்கள் உள்ளனர்..
 
இந்த திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் புதுச்சேரி காரைக்கால் ஏனாம் மாகி ஆகிய அனைத்து பிராந்தியங்களையும் உள்ளடக்கிது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் டாக்டர் வல்லவன் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்