க்ரிப்டோ கரன்சியை மொத்தமா தடை செய்யணும்! – ரிசர்வ் வங்கி ஆளுனர் பரபரப்பு பேச்சு!

Webdunia
சனி, 14 ஜனவரி 2023 (09:34 IST)
உலகம் முழுவதும் க்ரிப்டோகரன்சி பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் அதை மொத்தமாக தடை செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் க்ரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் கரன்சிகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. பலரும் இதுபோன்ற க்ரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது ஒரு தொழிலாக மாறியுள்ளது. இந்தியாவிலும் க்ரிப்டோகரன்சி பயன்பாடு உள்ள நிலையில், சமீபத்தில் ரிசர்வ் வங்கியும் டிஜிட்டல் கரன்சியை வெளியிட்டது.

இந்நிலையில் க்ரிப்டோ கரன்சி குறித்து சமீபத்தில் பேசிய ரிசர்வ் வங்கு ஆளுனர் சக்திகாந்த தாஸ் “க்ரிப்டோகரன்சி வர்த்தகம் சூதாட்டத்தை போன்றது. ஒவ்வொரு சொத்துக்கும், பணத்திற்கும் ஒரு மதிப்பு இருக்க வேண்டும். ஆனால் க்ரிப்டோகரன்சிகளை பொருத்தவரை எந்த மதிப்பும் கிடையாது. க்ரிப்டோகரன்சி எந்த வகையிலும் நிதியாக இருக்காது. இந்தியாவில் க்ரிப்டோகரன்சி முழுமையாக தடை செய்யப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்