லட்டு பிரசாத பாக்கெட்டுகளில் எலிக்குஞ்சுகள்! மீண்டுமொரு சர்ச்சை! - மும்பையில் அதிர்ச்சி!

Prasanth Karthick
புதன், 25 செப்டம்பர் 2024 (08:57 IST)

திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதாக வெளியான புகார் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மும்பை விநாயகர் கோவிலில் லட்டு பிரசாத பாக்கெட்டுகளில் எலிக்குஞ்சுகள் கிடந்ததாக வெளியான வீடியோ மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சமீபத்தில் திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து பெரும் பரபரப்பு நிலவியது. இதுதொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் திருப்பதி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தோஷ நிவர்த்தி செய்யப்பட்டது. இந்நிலையில் மும்பையில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில் பிரசாத பையில் எலிக்குஞ்சுகள் கிடக்கும் வீடியோ வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் வெளியான வீடியோவில் பிரசாதம் வைக்கும் ட்ரே ஒன்றில் பிரசாத பைகள் எலிகளால் கிழிக்கப்பட்டிருப்பதும், எலிக்குஞ்சுகள் கிடப்பதும் தெரிகிறது.

 

இந்த வீடியோ விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள கோவில் அறக்கட்டளை தலைவரான சதாசர்வன்கர் “வீடியோவில் காட்டப்படும் இடம் அசுத்தமாக உள்ளது. இது கோவிலில் எடுக்கப்பட்டது அல்ல. வெளியே எங்கேயோ எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவில் சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்படும். இது தொடர்பாக துணை கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்