ராமர் பாலம் தேசிய சின்னமாக அறிவிக்கப்படுகிறதா? மத்திய அரசு தீவிர ஆலோசனை

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (13:31 IST)
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுப்பிரமணியன் சாமி தொடர்ந்த வழக்கு குறித்து மத்திய அரசுக்கு தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. 
 
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற சுப்பிரமணியன் சுவாமி மனு மீது பிப்ரவரி முதல் வாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது 
 
இதனை அடுத்து இது குறித்து பிரமாண பத்திரத்தை பிப்ரவரி முதல் வாரத்திற்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
சேது சமுத்திர திட்டத்தால் ராமர் பாலம் பாதிக்கப்படும் என்றும் எனவே ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் சுப்ரமணியம் சாமி சில மாதங்களுக்கு முன்னால் வழக்கு தொடர்ந்தார் 
 
இன்று தமிழக சட்டசபையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்த நிலையில் தேசிய சின்னமாக ராமர் பாலத்தை அறிவிக்கும் பிரமாண பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்