பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தனது சொந்த கட்சியான ராஷ்டிரிய ஆம் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ராஷ்டிரிய ஆம் கட்சி என்னும் கட்சியை துவங்கி சொற்ப வாக்குகளையே பெற்று தோல்வியை சந்தித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் வடமேற்கு மும்பை தொகுதியில் பச்சை மிளகாய் சின்னத்தில் போட்டியிட்ட இவர் 1,995 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தது மட்டுமின்றி டெபாசிட் தொகையையும் இழந்தார்.
இந்நிலையில் இது குறித்து ராக்கி, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தனது தவறுகளை தெரிந்துக்கொண்டதாகவும், விரைவில் பாஜகவில் இணைய மோடி, ராஜ்நாத் சிங் மற்றும் சுஷ்மா ஸ்வராஜை சந்திக்க டெல்லி செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.