இனிமேல் 120 நாட்களுக்கு முன் ரிசர்வ் செய்ய முடியாது: ரயில்வே அதிர்ச்சி அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 17 அக்டோபர் 2024 (14:02 IST)
ரயிலில் பயணம் செய்ய 120 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யும் வசதி தற்போது உள்ள நிலையில், ரயில்வே துறை அதில் மாற்றம் செய்துள்ளது, இது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற விசேஷ காலங்களில் சொந்த ஊருக்கு செல்ல ரயில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால், நான்கு மாதங்களுக்கு முன்பே, அதாவது 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் என்ற வசதி இதுவரை இருந்தது.

ஆனால், தற்போது ரயில்வே துறை அறிவித்துள்ள புதிய அறிவிப்பின்படி, இனி 60 நாட்களுக்கு முன்பு மட்டுமே டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்ய முடியும் என்று ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், வெளிநாட்டு பயணிகளுக்கு 365 நாட்கள் முன்பதிவில் மாற்றம் இல்லை என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து, இனி இரண்டு மாதங்களுக்கு முன்பு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற மாற்றம், ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்