தொடர் ரயில் விபத்து; ராஜினாமா கடிதம் கொடுத்த ரயில்வே அமைச்சர்

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (16:11 IST)
சமீபத்தில் நடந்த ரயில் விபத்துக்களுக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளார்.


 

 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
நான் பிரதமர் மோடியை சந்தித்தேன். ரயில் விபத்துக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டேன். நான் மூன்று ஆண்டுகளாக ரயில்வே துறை அமைச்சராக பணியாற்றி வருகிறேன். ரயில்வே நலனுக்காக என்னுடைய ரத்தம் மற்றும் வியர்வையை அர்பணித்திருக்கிறேன் என்றார்.
 
கடந்த ஐந்து நாட்களில் இரண்டு ரயில் விபத்துக்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது ராஜினாமா கடித்தத்தை பிரதமரிடம் கொடுத்துள்ளார். 
அடுத்த கட்டுரையில்