இந்தியாவில் ஊரடங்கு தோல்வியடைந்த ஒன்று! – ராகுல் காந்தி கருத்து!

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (12:37 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஐந்தாவது கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இந்தியாவில் ஊரடங்கு தோல்வியடைந்து விட்டதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் உலகம் முழுவதும் கொரோனா தீவிரமடைய தொடங்கிய நிலையில் மார்ச் மாதம் இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இரண்டு கட்ட ஊரடங்குகள் கடுமையாக பின்பற்றப்பட்ட நிலையில் மூன்றாவது கட்ட ஊரடங்கு முதல் மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன, தமிழகத்தில் மூன்று கட்ட ஊரடங்கு வரை கடுமையாக பின்பற்றப்பட்ட நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கில்தான் தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. உலக அளவில் அதிக கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ராகுல் காந்தி ”இந்தியாவில் கொரோனா ஊரடங்கு தோல்வியடைந்த ஒன்றாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். தளர்வுகள் அறிவிக்கப்படும் நிலையில் தொற்றுகளும் அதிகரித்து வருவதாக கூறியுள்ள அவர், உலக போரின்போது கூட இந்தளவு முடக்க நிலை ஏற்படவில்லை என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்