மோடியைப் பற்றி தவறாகப் பேசிய வழக்கு – ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜர் !

Webdunia
வியாழன், 10 அக்டோபர் 2019 (14:18 IST)
தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடிகள் அனைவரும் ஏன் திருடர்களாக இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுப்பிய வழக்கில் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி மக்களிடம் கேள்வி கேட்பது போல ‘ஏன் மோடிகள் அனைவரும் திருடர்களாகவே உள்ளனர் ?. நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி இன்னும் எத்தனை மோடிக்கள் வருவார்களோ, யாருக்கு தெரியும்.’ எனப் பேசினார்.

ராகுலின் இந்த பேச்சு பிரதமர் நரேந்திர மோடியை அவதூறு செய்யும் விதமாக உள்ளதாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது அடுத்தக்ட்ட விசாரணை அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெறும் எனவும் அதில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி கம்போடியா சென்றிருந்த ராகுல்காந்தி இன்று நாடு திரும்பியதும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்