கொரோனாவில் மோடி அரசின் டாப் சாதனைகள்! – பட்டியலிட்ட ராகுல் காந்தி!

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (13:24 IST)
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 11 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் கொரோனா காலத்தில் அரசின் சாதனைகள் என பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார் ராகுல் காந்தி.

கொரோனா பரவலை தடுக்க பாஜக மத்திய அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று தொடர்ந்து ராகுல்காந்தி குற்றம் சாட்டி வருகிறார். முறையாக பொதுமுடக்கத்தை அமல்படுத்தவில்லை என்றும், வெளிமாநில தொழிலாளர்கள் கால்நடையாக சென்று இறந்த சம்பவங்கள் போன்றவற்றிலும் காங்கிரஸ் மத்திய அரசை சாடி வருகிறது.

இந்நிலையில் கொரோனா காலத்தில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ராகுல் காந்தி பகடியாக பதிவொன்றை இட்டுள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “கொரோனா காலத்தில் அரசின் சாதனைகள்

பிப்ரவரி – ஹலோ ட்ரம்ப்
மார்ச் – மத்திய பிரதேச ஆட்சியை கவிழ்த்தது
ஏப்ரல் – விளக்கேற்ற சொன்னது
மே- அரசமைத்த ஆறாம் ஆண்டு விழா
ஜூன் – பீகாரில் காணொளி ரதம்
ஜூலை – ராஜஸ்தான் அரசை கவிழ்க்க முயன்றது” இவ்வாறு அவர் மத்திய அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்