ப்ளாஸ்மா தானம் வேணுமா.. நான் தரேன்! – 200 பேரை ஏமாற்றிய பலே ஆசாமி!

செவ்வாய், 21 ஜூலை 2020 (12:00 IST)
தெலுங்கானாவில் கொரோனா பாதித்தவர்களுக்கு ப்ளாஸ்மா தானம் தருவதாக பலரை ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா சிகிச்சைக்கு ப்ளாஸ்மா தானம் நல்ல பலனளிப்பதாக பலர் கூறி வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகளும் கொரோனாவிலிருந்து மீண்டவர்களை ப்ளாஸ்மா தானம் செய்ய வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இதை வைத்து சிலர் மோசடி சம்பவங்களிலும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

தெலுங்கான மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ப்ளாஸ்மா தானம் செய்வதாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதை நம்பி கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது குடும்பங்கள் இளைஞரை அணுக அவர் ப்ளாஸ்மா தானம் செய்ய பணம் கேட்டுள்ளார். சிலர் பணம் அளித்த நிலையில் அத்துடன் அவர்களது தொடர்பை துண்டித்துக் கொண்டு தப்பியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட போலீஸார் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்று யாராவது ப்ளாஸ்மா தானம் செய்வதாக பணம் கேட்டால் மக்கள் காவல்நிலையத்தை தொடர்பு கொள்ளவும் தெலுங்கானா போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்