ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே காலாசாரம் என்பதா? பாஜகவுக்கு ராகுல் காந்தி கண்டனம்

Webdunia
ஞாயிறு, 24 ஜனவரி 2021 (19:26 IST)
ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்று கூறும் பாஜகவுக்கு ராகுல் காந்தி தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் வரும் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேற்று முதல் பிரசாரம் செய்து வருகிறார். அவர் இன்று திருப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய போது ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்ற கொள்கையை வகுத்து வரும் பாஜகவுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் 
 
தமிழ் ஒரு மொழி அல்லவா, தமிழர்களுக்கு என தனி கலாச்சாரம் இல்லையா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். மேற்குவங்கத்தில் பேசுவது தனிமொழியாக இல்லையா? மேற்கு வங்காளத்திற்கு என வரலாறு இல்லையா? பஞ்சாபி மொழியை மக்கள் பேசவில்லையா? வடகிழக்கில் தனி மொழிகள் இல்லையா என்று அவர் கேள்வி மேல் கேள்வி எழுப்புவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சீனா என்ற வார்த்தையே மோடியின் வாயில் இருந்து வரவே இல்லையே எங்கே போனது 56 இன்ச் மார்பு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்