தமிழகத்தை அடுத்து புதுச்சேரியிலும் இதற்குத் தடை !

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2019 (09:15 IST)
தமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளதை அடுத்து புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்காத மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தடை விதிக்கப்பட்டு ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. உணவுப்பொருட்கள், பால், எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தால் மக்கள் மீண்டும் துணிப்பைகளுக்கு மாற ஆரம்பித்துள்ள இவ்வேளையில் இந்த திட்டத்தை புதுச்சேரியிலும் அமல்படுத்த அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் ‘ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள் போன்றவற்றை புதுச்சேரியில் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனால் புதுச்சேரி பொதுமக்களும் சுற்று சூழல் ஆர்வலர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்